Homeசெய்திகள்தமிழ்நாடுபிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி

பிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி

-

பிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலில் உள்ளதை விட கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மே 8-ல் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

கடந்த மே 29 ஆம் தேதி பிளஸ் 2 மறுகூட்டலுக்கு WWW.DGE.tn.Gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரச் தேர்வுகள் இயக்கம் அறிவித்தது. பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்கு விடைத்தாள் நகல்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மறுகூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.205, உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 கட்டணம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

mark

இந்நிலையில் பிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி ஏற்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. நகலில் உள்ளதை விட கூடுதலாக 3 முதல் 7 மதிப்பெண்கள் வரை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்டவே மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. இப்படி கூடுதல் மதிப்பெண்களை வழங்கியது மாணவர்கள் கல்லூரி சேர்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் பிற மாணவர்களின் கல்லூரி வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்படும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

MUST READ