முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான வழக்கில் வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி – டிடிவி தினகரன்
கடந்த 2011- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள வெள்ளலூர் கோயிலுக்குள் மேலூர் தேர்தல் அதிகாரியும், வட்டாட்சியருமான காளிமுத்துவை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கியதாக மேலூர் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர், மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 21 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்தனர்.
ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிபதி முத்துலட்சுமி முன்பாக இன்று (பிப்.09) விசாரணைக்கு வந்த போது, மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால், இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.