Homeசெய்திகள்தமிழ்நாடுஅன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வீடியோ மூலம் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வீடியோ மூலம் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

அன்னியூர் சிவாவுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதில் அவர் கூறியதாவது, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெறச் செய்யுங்கள். வன்னியர்களுக்கு 20% உள் ஒதுக்கீடு வழங்கியது திமுகதான்” வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20%உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக ஆட்சி; 1987 போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான போராளிகளுக்கு நினைவு மண்டபம் கட்டப்படுகிறது சமூக நீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன்மூலம் சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்!”என இவ்வாறு கூறினார்.

MUST READ