Homeசெய்திகள்தமிழ்நாடுவயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்தவர் பலி - உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்தவர் பலி – உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம்

-

வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த திரு.காளிதாஸ் (வயது 34) த/பெ.காளி என்பவர் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (30,07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த திரு.காளிதாஸ் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த திரு. காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ