Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சாராய உயிரிழப்புகள் : முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்..

கள்ளச்சாராய உயிரிழப்புகள் : முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.

திண்டிவனம் அருகேயுள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொடர்ந்து 45 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறேன். 2016ம் ஆண்டு கூட்டணி இல்லாமல் தனியாக நின்றபோது ஆட்சியில் அமர்த்தி இருந்தால் ஒரு சொட்டு சாராயம் இல்லாத தமிழகத்தை வரவேற்றிருக்கலாம். தற்போது கள்ளகுறிச்சியில் 38 பேர் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும்.

கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணம், மதுராந்தகத்தில் 30 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு செயல்பட்டு இருக்கவேண்டும். கள்ளகுறிச்சி ஆட்சியர் கள்ளச் சாராயம் குடித்து இறக்கவில்லை என்று கூறிவிட்டு, உயிரிழப்பு அதிகரித்தபோது அரசு ஒப்புக்கொண்டது. தற்போது காவல்துறை மீதான நடவடிக்கை சரியானதுதான். கள்ளகுறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலுவின் ஆதரவாளரான எம்.எல்.ஏ.வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கைது செய்தவர்களை விடுவிக்க சொல்லியுள்ளனர். சாராய வியாபாரியான கோவிந்தராஜ் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பேனர் வைத்துள்ளார்.

ராமதாஸ்
 

மதுவிலக்குதுறை அமைச்சர் முத்துசாமி, பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இச்சாவுகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். கள்ளச் சாரயம், கஞ்சா விற்பனையில் தமிழ்நாடு தள்ளாடுகிறது. மது வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு குடிபழக்கம் உள்ளவர்கள்கூட வேண்டாம் என்றே கூறுவார்கள். தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கை இக்கூட்டத்தொடரில் அரசு அறிவிக்கவேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

MUST READ