விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலையில் இருக்கும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த ஜுன் 10-ந் தீவிர போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. காலை 7 மணி தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவானது அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 2,37,031 வாக்காளர்களில், 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்படும் இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது இன்று தெரியவந்துவிடும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 63,205 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் சி அன்புமணி 27,905 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் அபிநயா 4,973 வாக்குகளை பெற்றுள்ளார். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 35,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
இதனைக் கொண்டாடும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.