Homeசெய்திகள்தமிழ்நாடுகாலை உணவு திட்டத்தால் கக்கூஸ் நிரம்புகிறதா? ஸ்டாலின் கண்டனம்

காலை உணவு திட்டத்தால் கக்கூஸ் நிரம்புகிறதா? ஸ்டாலின் கண்டனம்

-

காலை உணவு திட்டத்தால் கக்கூஸ் நிரம்புகிறதா? ஸ்டாலின் கண்டனம்

காலை உணவு திட்டத்தால் பள்ளி கழிவறைகள் நிரம்பி வழிவதாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"ஊழல் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Video Crop Image

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Udhayanidhi stalin

இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, “கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!” என சாடியுள்ளார்.

MUST READ