பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி உங்களுடைய கருத்து என்ன? என உங்களில் ஒருவன் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப் பற்றி பேசி, மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் #MKStalin | #PTRPalanivelThiagarajan | #UngalilOruvan pic.twitter.com/C3k1eKhvIr
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 2, 2023
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ஒரே வருடத்தில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களின் மூதாதையரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். அந்த பணத்தை எங்கு, எப்படி பதுக்குவது என்பது அவர்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. இங்கிலாந்தில் 2 நிறுவனங்களை சபரீசன் தொடங்கியுள்ளார். முறைகேடாக சுருட்டிய பணத்தை முதலீடு செய்வதற்காகவே இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன என பேசியிருந்தார். இதற்கு திமுக தரப்பு அமைதியாக இருந்த சூழலில், தான் பேசியதாக வெளியான ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது என ஏற்கனவே பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.