Homeசெய்திகள்தமிழ்நாடுசட்ட சபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதா?- ஸ்டாலின் விளக்கம்

சட்ட சபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதா?- ஸ்டாலின் விளக்கம்

-

சட்ட சபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதா?- ஸ்டாலின் விளக்கம்

ஜெயலலிதாவுக்கு சட்ட சபையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, நிர்மலா சீதாராமன் வாட்ஸ் அப் வரலாற்றை படித்து பேசுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுகையில், 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவர்களின் சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தி.மு.க.வை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். உங்களது பதில் என்ன? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது, அவையைத் தவறாக வழிநடத்துவது” என்றார்.

MUST READ