Homeசெய்திகள்தமிழ்நாடுமிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

எந்தவித மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

MKStalin

திமுக எம்பி ஆ.ராசாவை கைது செய்வோம் என நாடாளுமன்றத்தில் மிரட்டிய ஸ்மிருதி இரானி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எந்தவித மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைக்க சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால் ராகுலின் பதவியை பறிப்பதில் பாஜக வேகம் காட்டியது. நாடாளுமன்றத்தில் திமுகவினரின் குரலை கேட்டால் பாஜக அரசு நடுங்குகிறது. பாஜகவின் நடுக்கம் அவர்களது கட்சி நிகழ்ச்சிகளிலும் எதிரொலிக்கிறது.

"நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காகதான் பாடுபடுகிறோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அதிகம் தாக்கக்கூடிய கட்சியாக திமுக உள்ளது. காங்கிரஸ் கட்சியை விட திமுகவை தான் அதிகமாக அமைச்சர்கள் விமர்சிக்கின்றனர். மற்ற எந்த மாநில கட்சிகளின் பெயர்கள் கூட குறிப்பிடப்படுவதில்லை. மணிப்பூர் பற்றிய ராகுல்காந்தியின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாத ஸ்மிருதி இராணி, திமுக மீது அவதூறு சுமத்தி திசை திருப்ப முயன்றுள்ளார். திமுகவின் பெயரைக் கேட்டாலே அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள்.” என்றார்.

MUST READ