இன்று மோக்கா புயல் உருவாகிறது. இதனால் தமிழகத்தில் நான்கு நாட்கள் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று உருவாகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதியானது மோக்கா புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், தமிழ்நாட்டில் வடகடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடக்கு சுழற்சி நிலவுகின்றது. இதே போல் தென்கிழக்கு வங்கக்கடல் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதனால் அப்பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது . இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் .
வலுவடைந்து வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதிகள் நோக்கி நகர வாய்ப்பு இருக்கிறது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து மே 11ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு சில இடங்களில் இது மின்னலுடன் மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
மேலும், தென்கிழக்கு வங்க கடல் பகுதி அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நான்கு நாட்களுக்கு மணிக்கு 50 கிலோமீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரை வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்பு இருக்கிறது . அதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ் கடலுக்குச் சென்றவர்களும் இன்று கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.