Homeசெய்திகள்தமிழ்நாடுசிறை துறையில் நவீன தொழில்நுட்பம் - அம்ரேஷ் பூஜாரி

சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் – அம்ரேஷ் பூஜாரி

-

- Advertisement -

தமிழகத்தில் உள்ள சிறைகளை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பதற்காக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார்.

தமிழக சிறைத் துறையின் டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி பதவியேற்றதிலிருந்து பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை சிறை துறையில் அமல்படுத்தி வருகிறார்.

சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் - அம்ரேஷ் பூஜாரி

வெளிநாட்டில் உள்ளது போல் கைதிகளை தொடர்பு கொள்ள இன்டர்காம் வசதி, திரைத்துறை உடலில் அணிந்திருக்கும் கேமராக்கள், சிறை கைதிகளுக்கான ஆதார் அட்டை பெறுதல் என பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைகள் மற்றும் சிறப்பு பெண்கள் சிலை ஆகியவற்றை கண்காணிப்பதற்காக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கி வைத்துள்ளார்.

49 இன்ச் அளவு கொண்ட மிகப்பெரிய சுவர் திரையில் அனைத்து மத்திய சிறைகளிலிருந்து வரும் சிசிடிவி காட்சிகளை நேரடியாக 24 மணி நேரமும் காணும் வகையிலான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் - அம்ரேஷ் பூஜாரி

இந்த மையத்தில் இரண்டு அதிகாரிகள் 3 ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் சிறை கைதிகள் நடவடிக்கையை கண்காணிக்கவும் சிறை ஊழியர்கள் பணி செய்வதை கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், சிறை ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட உடலில் அணிந்து கொள்ளும் கேமராக்கள் மூலம் வரும் காட்சிகளையும் நேரடியாக இந்த நவீன திரையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் - அம்ரேஷ் பூஜாரி

அதுமட்டுமல்லாது சிறைகளில் அசம்பாவித சூழ்நிலைகள் ஏற்படும்பொழுது உயர் அதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்ட சிலைகளில் இருந்து வரும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கட்டளை இடுவதற்கும் இது பயன்படும் என தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் பல்வேறு நவீன மென்பொருட்களை பயன்படுத்தி இந்த சுவர் திற செயல்பட்டு வருவதாகவும் அம்ரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

MUST READ