Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..

தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..

-

- Advertisement -
மங்கி குல்லா கொள்ளையர்கள்
தஞ்சையில் மங்கி குல்லா கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கீழவஸ்தா சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்- இந்திராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், நேற்றிரவு மகள்களுடன், தாய் இந்திராணி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது முன்பக்க கேட்டை திறப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து இந்திராணி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மேலாடை அணியாமல் முகத்தில் மங்கி குல்லா அணிந்தபடி இரண்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இந்திராணி, திருடன் திருடன் என கூச்சலிட்டவாறு வீட்டிற்குள் சென்றுவிட முயன்றார். அதற்குள் விரட்டி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் தாய் மற்றும் மகள் இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்து 7 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றனர்.

மங்கி குல்லா கொள்ளையர்கள்

அத்துடன் வீட்டின் கதவில் தங்களுடைய கைரேகை பதிந்து விடக்கூடாது என்பதற்காக, மங்கி குல்லாவை கழட்டி கதவை துடைத்துவிட்டு சென்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வீடு புகுந்து பெண்களை தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மங்கி குல்லா கொள்ளையர்களால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

MUST READ