Homeசெய்திகள்தமிழ்நாடுநா.த.க-விலிருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்!

நா.த.க-விலிருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்!

-

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, கட்சியினர் இடையே அதிருப்தி அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்த நிலைNயில், தற்போது நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக பூபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக தன்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்ததாக தெரிவித்துள்ளார். 2016இல் முதன்முதலாக ஒரத்தூர் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டு, 2024ல் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆக உயர்ந்ததாகவும், 2 நாடாளுமன்றத் தேர்தல், 2 சட்டமன்றத் தேர்தல், ஒரு உள்ளாட்சித் தேர்தல், 2 இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் தான் சிறப்பாக பணிபுரிந்ததாக பூபாலன் தெரிவித்துள்ளார்.

இதுநாள் வரை தாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் சீமான் பொருட்படுத்தும் படி இல்லை என்றும், இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம் என்றும் பூபாலன் குறிப்பிட்டுள்ளார்.  தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது என்றும், எவரும் தன்னிடம் கேள்வியும் கேட்க கூடாது. தன் இஷ்டப்படி தான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று சீமான் தன்னிடம் கூறியதாக வேதனை தெரிவித்துள்ள பூபாலன்,

தங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரம் சீமானால் தர முடியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாகவும் பூபாலன் அறிவித்துள்ளார்.

 

MUST READ