திருவள்ளுர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கொள்கை விரோத போக்கை கண்டித்து, அக்கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சபரீஷ், சதீஷ் ஆகியோர், அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தனர்.
திருவள்ளுர் மாவட்ட திமுக செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான நாசரை அவரது இல்லத்தில் சந்தித்து, சபரீஷ், சதீஷ் ஆகியோர் தலைமையில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் நாசர் திமுக கொடி நிறம் கொணட சால்வை அணிவித்து வரவேற்றார்.