சீமானால் எங்கள் பொருளாதரத்தை,வாழ்க்கையை இழந்துள்ளோம். ஆனால் அவர் எங்களை கேவலமாக நடத்துகிறார் என்று கூறி,நாதக கட்சியில் இருந்து மேலும் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து மாவட்ட ஒருங்கினைப்பாளர் கரு. பிரபாகரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் வெளியேறினர்.
இந்த நிலையில் மீண்டும் இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒன்றிய செயாலாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக கிருஷ்ணகிரியில் பேட்டி அளித்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் சூர்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாங்கள் நாதக கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பயணித்து வருகிறோம்.
மேலும் கட்சியில் அடிப்படை பணிகளை செய்து குடும்பம்,பிள்ளைளை விட்டு இரவு பகல் பாரமால் கட்சிக்காக உழைத்தோம். ஆனால் எங்களுக்கு முன்னிரிமை கொடுக்கமால் கட்சியில் அனுபவமில்லாதவர்களுக்கு பதவிகளை கொடுத்து எங்களை கிழே தள்ளி விட்டு வருகின்றனர். கட்சிக்காக வேலை செய்தவர்களை தவிர்த்து,பத்து பேர் மட்டும் சேர்ந்து கொண்டு குழு அரசியல் செய்து வருகின்றனர் என்றும்,மேலும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்களை எச்சில் என கூறுகிறார்.
அண்ணன் வந்தால் அவருக்கு கொடிகம்பம் நடுதல்,போஸ்டர் ஒட்டுவது,ரூம் போடுவது,சாப்பாடு என்று அனைத்தும் நாங்கள் செய்வோம். ஆனால் எங்களை எச்சில் என்று கூறுகிறார். அப்போது மாற்றுகட்சிகளில் இருந்து பலர் வந்துள்ளார்கள்,அவர்கள் எல்லாம் எச்சில் இல்லையா? கட்சிக்காக வேலை செய்பவர்களை முடக்குகின்றார்கள்.
இது குறித்து நான் பலமுறை தலைமைக்கு தெரிவித்தோம். ஆனால் அதை பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலந்தாய்வு கூட்டத்தில் பார்த்துக் கொள்ளலாம் என சீமான் தெரிவிக்கிறார். கட்சி தலைமையில் இருந்தும் யாரும் உதவுவதில்லை. பல ஆண்டுகளாக கட்சி பணி செய்து பதவி உயர்வு கேட்டால் நீங்கள் இப்படி தான் இருக்கவேண்டும், நாங்கள் என்ன சொல்கிறோமா அதை மட்டும்தான் நீங்கள் செய்ய வேண்டும் எனவும், இதனால் நாங்கள் எவ்வளவோ பொருளாதாரத்தை இழந்து நிற்கிறோம்.
பத்து வருடங்களாக கட்சியில் உழைத்த எங்களை எந்த பதிவி உயர்வு மற்றும் மதிப்பு அளிப்பதில்லை என கூறினார். மேலும் இவருடன் இணைந்து 500க்கு மேற்பட்ட நாதக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர்.
இந்த பேட்டியின் போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாதுகாப்பு படை செயலாளர் அசோக்,மாவட்ட செய்தி தொடர்பாளர் கௌதம்,ஒன்றிய அமைப்பாளர் தாமஸ், பர்கூர் ஒன்றிய செயலாளர் கவியரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.