Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை

எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை

-

- Advertisement -

எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 2-வது நாளாக தொடரும் சோதனை

திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை தியாகராஜர் நகர் அலுவலகம், பாலாஜி பல் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை

நடைபெற்றுவருகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெகத்ரட்சகன் போட்டியிடும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக ரூ. 110 கோடி ரூபாய் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தார். தனது மனைவிக்கு ரூ. 43 கோடி இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தற்போது ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனையை தொடர்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ