எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 3-வது நாளாக தொடரும் சோதனை
திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெகத்ரட்சகன் போட்டியிடும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக ரூ. 110 கோடி ரூபாய் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தார். தனது மனைவிக்கு ரூ. 43 கோடி இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தற்போது ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனையை தொடர்ந்துவருகின்றனர்.
அந்த வகையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 3 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரியிலும் 3ஆவது நாளாக நடைபெறும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.