அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு சென்று கொண்டிருக்கும்போது காரில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 4 கார்களில் வந்த மர்ம நபர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் தாக்குதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை அடுத்து, கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. தேர்தல் முடிவுகள் குறித்து டிசம்பர் 22 ஆம் தேதி சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.