Homeசெய்திகள்தமிழ்நாடுநில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவி செய்த வழக்கறிஞர் கைது

நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவி செய்த வழக்கறிஞர் கைது

-

- Advertisement -

நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவி செய்த வழக்கறிஞர் சார்லியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி போலியாக பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட இந்த வழக்கானது கடந்த ஜூன் 14-ம் தேதி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கடந்த 5, 7 மற்றும் 11ம் தேதிகளில் சிபிசிஐடி போலீசார் நடத்திய இந்த சோதனையின் போது எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பலர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் மற்றும் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான பிரவீன் ஆகியோரை கடந்த 16ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தற்போது, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சார்லி என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த பிருதிவிராஜிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் Non Trasable certificate பெற இந்த வழக்கறிஞர் சார்லி உதவியாக இருந்தார் என கூறப்படுகிறது. இதையடுத்து சார்லியை கைது செய்த சிபிசிஐடி போலீசார் இன்று கரூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ