சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் ஹவர் நேர மின் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான தமிழக அரசின் அரசாணையில், “சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டைப் பொறுத்து 15%- லிருந்து 25% வரை பீக் ஹவர் கட்டணத்தைக் குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தி இணைப்புகளுக்கான கட்டணமும் 50% குறைக்கப்பட்டுள்ளது. சோலாருக்கு கட்டணக் குறைப்பு மூலம் ஏற்படும் இழப்பை ஈடுச்செய்ய மின்வாரியத்திற்கு ரூபாய் 196.10 கோடியை அரசு விடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகரித்த காற்று மாசு!
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.