யானை குட்டிகளைப் பார்க்கவும், பொம்மன்- பெள்ளி தம்பதியைக் காணவும் இன்று (ஆகஸ்ட் 05) முதுமலைக்கு வருகிறார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!
இன்று (ஆகஸ்ட் 05) மாலை மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மசினக்குடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிறார். பின்னர் மசினக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகிறார்.
திரைத்துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்ற ‘The Elephant Whisperers’ என்ற குறும்படத்தில் நடித்த பொம்மன்- பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்துப் பேசுகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமை பார்வையிட்டு, பழங்குடியின மக்களையும் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து, தெப்பக்காடு பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் ஆவர் பார்வையிடுகிறார்.
கிரைம் த்ரில்லரில் வைபவ்….. ‘ரணம்’ படத்தின் டீசர் வெளியானது!
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு குடியரசுத் தலைவர் வருவதையொட்டி, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்லும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.