Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்னும் எத்தனை உயிர்கள் அந்த பலிபீடத்துக்குத் தேவை! ஆளுநருக்கு முரசொலி கண்டனம்

இன்னும் எத்தனை உயிர்கள் அந்த பலிபீடத்துக்குத் தேவை! ஆளுநருக்கு முரசொலி கண்டனம்

-

- Advertisement -

இன்னும் எத்தனை உயிர்கள் அந்த பலிபீடத்துக்குத் தேவை! ஆளுநருக்கு முரசொலி கண்டனம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த விளையாட்டை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

rn ravi mkstalin

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, “ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பி 4 மாதங்கள் ஆனபிறகு, ‘இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சட்டமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று கண்டுபிடித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி. பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்கவே அவருக்கு நான்கு மாதம் தேவைப்பட்டு இருக்கிறது. ‘இவர்தான் துரிதமாக முடிவெடுக்க வேண்டும் என்று தினந்தோறும் வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்றுவதற்கும – ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியதற்கும் இடையில் 44 பேர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் எத்தனை உயிர்கள் அந்த பலிபீடத்துக்குத் தேவை என்று தெரியவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆசை காட்டி மோசடி நடக்கும் விளையாட்டு என்ற பெயரால் ஏமாற்றுதல் நடக்கும் – இதனால் பலரது பணமும் பறிக்கப்படும் – தற்கொலைகள் நடக்கும் – குடும்பங்கள் அழியும் – அதனை ஒரு மாநில அரசு பார்த்துக் கொண்டு கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமா? சட்டம் ஒழுங்கைக் காப்பதும், மக்களைக் காப்பதும். மோசடியாளர்களை முடக்குவதும், ஏமாற்றுக்காரர்களைத் தடுப்பதும் மாநில அரசின் கடமை அல்லவா? அந்தக் கடமையைச் செய்யக் கூடாது என்று ஒரு மாநிலத்தின் ஆளுநரே சொல்கிறார். இதனை விட ‘சட்டவிரோதம்’ இருக்க முடியுமா? யாருக்குச் சார்பானவர் இந்த ஆளுநர்?” என கேள்வி எழுப்பியுள்ளது.

MUST READ