Homeசெய்திகள்தமிழ்நாடுஆசிரியை கொலை - மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை!

ஆசிரியை கொலை – மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை!

-

ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி, அவரது காதலன் மதன் என்பவரால் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மறைந்த ஆசிரியை ரமணியின் உடலுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், கொலை சம்பவத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக அவர்களுக்கு வரும் திங்கட்கிழமை கவுன்சிலிங் அளிக்கப்பட உள்ளதாகவும், அதன் பின்னரே பள்ளி திறக்கப்படும் என்றும் கூறினார்.

மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி அளித்தார். மேலும், ஆசியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

MUST READ