Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- முத்தரசன்

ஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- முத்தரசன்

-

ஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- முத்தரசன்

ஆளுநர் ஆர்.என். ரவி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செலாளர் முத்தரசன், “சிதம்பரம் கோயிலில் பிரச்னை செய்யும் தீட்சிதர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து சிதம்பரம் கோயிலை மீட்க வேண்டும். குஜராத்தில் பா.ஜ.க கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியை பிடித்தது போல் தற்போது மணிப்பூரில் கலவரத்தை ஏற்படுத்தி பிரதமர் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறார். எனவே நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: கிருஷ்ணகிரியில் முத்தரசன் கருத்து | CPI  mutharasan - hindutamil.in

ஆளுநர் ரவி முரண்பாடுகளை மட்டுமே உருவாக்குகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டுமே பேசி வருகிறார். அமலாக்கத்துறையை பா.ஜ.க கைப்பாவையாக பயன்படுத்துகிறது. முதல்வர் யாரை விரும்புகிறாரோ அவரை அமைச்சராக தேர்வு செய்வார். ஆளுநர் திடீரென்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குகிறார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். செந்தில் பாலாஜியின் பதவியை நீக்குகிறார், இரவே அதை திரும்ப பெறுகிகிறார். இப்படி எல்லாம் செய்து 20240ல் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. சிதம்பரம் கோயில் சர்ச்சை குறித்த கேள்விக்கு தீட்சிதர்கள் என்ன வானலாவிய அதிகாரம் படைத்தவர்களா ? தமிழக அரசு தவறு செய்யும் தீட்சிதர்களை கைது செய்திட வேண்டும் . தீட்சிதர்களிடமிருந்து சிதம்பரம் கோயிலை மீட்க வேண்டும்” என்றார்

MUST READ