Homeசெய்திகள்தமிழ்நாடுபசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!

பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!

-

- Advertisement -

 

பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!
Photo: EPS

மதுரை மாவட்டம், தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு அ.திமு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். பின்னர், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையிலும், அவர் பங்கேற்று மரியாதைச் செலுத்தினார்.

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாளையொட்டி, மதுரை வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

இதன் பின், அ.தி.மு.க. பொதுச்செயலாளரான பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னுக்கு சென்றார். அங்கு உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர் மாலை வைத்தும், அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் எடப்பாடி பழனிசாமி மரியாதைச் செலுத்தினார். பின்னர், தேவர் குருபூஜையிலும் கலந்து கொண்டார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் பவுன்சர்கள் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதைச் செலுத்தினர்.

மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “முத்துராமலிங்கத் தேவருக்கு பெருமைச் சேர்த்து கொடுத்தது அ.தி.மு.க. அரசு. தேவர் ஜெயந்தியையொட்டி, அ.தி.மு.க. சார்பில் மரியாதைச் செலுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ