Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

-

சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் என்றாலே நம் அனைவரின்  நினைவுக்கு வருவது ஏற்காடு மலைப் பிரதேசம் ஆகும்.சேலத்தில் இன்னும்  காண வேண்டிய பல சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

ஒரு நல்ல கிராமச் சூழலுக்கு ,ஒரு நாள் டூர் செல்ல ஏற்ற இடமாகத் தான் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டம் முல்லைவாடி சாலையில் இருந்து சுமார் 15 கி.மீ.தூரத்தில் உள்ளது முட்டல் கிராமம்.இந்த முட்டல் கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஆணைவாரி ஏரி உள்ளது.ஏரியியில் இருந்து 2 கி.மீ.தூரத்தில் முட்டல் அருவி உள்ளது.

இந்த அருவியில் வழிந்தோடும் நீரானது அருகில் உள்ள கிராம ஏரிகளில் சேகரமாகிறது.வனத்துறையினர் இதனை சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர்.இந்த சுற்றுலாத்தலமானது பலருக்கும் தெரியாததாகவே உள்ளது.ஒரு நாள் குடும்பத்தோடு டூர் செல்ல ஏற்றத்தலமாக உள்ள இடம்.

பருவமழை காலங்களில் நல்ல மழை பெய்து நீர் வழிந்தோடும்.சுற்றுலா பயணிகளின் பொழுதைக் கழிக்கும் வகையில் அங்கு படகு சவாரியும் முட்டல் ஏரியில் உள்ளது. அருவியில் ஆர்பரித்து வரும் நீரில் ஆனந்தமாக குளிக்க ஏற்ற இடம்.மேலும் இந்த அருவியில் மூலிகை நீர் கலந்து வருவதால்  குளித்தால் உடலுக்கு நல்லது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.   குளியல் போட்ட பிறகு ஆடைகளை மாற்ற அரையும் உள்ளது.

செல்லும் வழியில் பச்சைப்பசேல் என்று சாலையின் இருபுறமும் வயற்காடுகள் நம்மை கைகூப்பி வரவேற்க காத்துக்கொண்டிருக்கின்றன. அருவியில் குளியலைப்  போட்டுவிட்டு வந்த பிறகு சூடாக சாப்பிட மீன்,கார வடை,இனிப்புபணியாரம் போன்ற திண்பண்டங்களும் விற்கப்படுகின்றன.

 

ஏரியில் படகு சவாரியும்,நீச்சல் போட தனியிடமும்  உள்ளது.மேலும் அருகே குழந்தைகள் விளையாட பூங்கா என அனைத்தும் உள்ளது.

 

செப்டம்பர் முதல் ஜனவரி வரை அருவில் நீரானது ஆர்பரித்துக் கொட்டுகிறது.மேலும் சிறியளவு மழை பெய்தாலும் அருவியில் நீர் ஊற்றுமாம்.சில பகுதியில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குரங்குகள் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே குடும்பத்துடன் செல்ல ஏற்றயிடமாக முட்டல் அருவி உள்ளது. சேலம் பெரம்பலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் வார இறுதிநாட்களில் சென்று வர ஏற்ற இடமாகவும் திகழ்கிறது.

MUST READ