போக்சோ வழக்கில் சிக்கிய நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சிவராமன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.எஸ்.எஸ் மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் அத்துமீறில் ஈடுபட்டதாக, நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சிவராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவராமனை பதவியில் இருந்து நீக்குவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தொகுதியை சேர்ந்த சிவராமன் என்பவர் கட்சியை கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதை அடுத்து ஒழுங்கு நடவடிக்கைகள் குழுவின் பரிந்துரையின்படி அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து அடிப்படை உறுப்பினரிலிருந்து முழுமையாக நீக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவரது கருத்திற்கு செயலுக்கும் இனி கட்சி பொறுப்பேற்காது என்றும் அதில் குறிப்பிட்ட உள்ளது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் அவரோடு கட்சி அரசியல் சார்ந்த செயல்பாடுகள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.