
‘நீங்கள் நலமா’ என்று கேட்கும் முதல்வர் அவர்களே நாங்கள் நலமாக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசின் ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 06) காலை 11.00 மணிக்கு சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் நலமா” என்று கேட்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!
‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை! #நாங்க நலமா இல்லை_ஸ்டாலின்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பணி நிரந்தரம் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, முதியோர் ஓய்வூதியம் இல்லை, விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை, நீட் ரத்து இல்லை, தாலிக்கு தங்கம் இல்லை, மடிக்கணினி இல்லை என்று குறிப்பிட்டுள்ள புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார்.