Homeசெய்திகள்தமிழ்நாடுநடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார் தினேஷ் கார்த்திக்!

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார் தினேஷ் கார்த்திக்!

-

 

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார் தினேஷ் கார்த்திக்!
Photo: ICC

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத் திறப்பு விழா வரும் ஜூன் 23- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா வெளியே வரும்போது மின்தடை… பா.ஜ.க.வினர் சாலை மறியல்!

இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பழனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, திரைப்பட நடிகர் யோகிபாபு மற்றும் சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார் தினேஷ் கார்த்திக்!

நடராஜன் கிரிக்கெட் அகாடமியை ஏற்கனவே தொடங்கி நடத்தி வரும் நடராஜன், இந்த மைதானத்திற்கு ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்று பெயர் சூட்டியுள்ளார்.

ஏழை, எளிய, கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், இந்த மைதானம் திறக்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து- கிருஷ்ணசாமி

இது குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “எனது கனவு நனவாகும் திட்டமான நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழாவை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ