
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சொகுசு கப்பல் போக்குவரத்து இன்று (அக்.14) காலை 08.00 மணிக்கு தொடங்கியது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
நாகை துறைமுகத்திற்கு கடந்த அக்டோபர் 07- ஆம் தேதி சொகுசு கப்பல் வந்தடைந்த நிலையில் சோதனையோட்டம், அக்டோபர் 09- ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (அக்.14) காலை 08.00 மணிக்கு நாகை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து கப்பல் சேவையைத் தொடங்கி வைத்தனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் காணொளியில் பங்கேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே காணொளி வாயிலாக உரையாற்றினர். நாகையில் இருந்து இலங்கை செல்ல 18% ஜி.எஸ்.டி., சேர்த்து ஒரு நபருக்கு ரூபாய் 7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது!
40 ஆண்டுக்கு பின் தொடங்கிய சொகுசு கப்பல் போக்குவரத்து மூலம் மூன்று மணி நேரத்தில் இலங்கைக்கு செல்ல முடியும். 150 பேர் பயணிக்கக் கூடிய கப்பலில், முதல் பயணத்தின் போது, 50 பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 12- ஆம் தேதி தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.