
நாகப்பட்டினம்- காங்கேசன்துறை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
ஏவுகணைத் தாக்குதலைக் கண்டு அச்சத்தில் உறைந்த செய்தியாளர்!
நாகப்பட்டினம், காங்கேசன்துறை இடையில் பயணிகள் கப்பல் சேவை, வரும் அக்டோபர் 10- ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. அதன் அடிப்படையில், இன்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் கப்பல், மதியம் 01.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தைச் சென்றடைந்தது.
சோதனையின் போது, கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடற்பாறை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் உள்ளிட்டவைத் தொடர்பாக, கணக்கெடுக்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
சுமார் அரை மணி நேரம் நின்ற பிறகு, மதியம் 01.45 மணியளவில் மீண்டும் கப்பல் நாகப்பட்டினம் நோக்கிப் புறப்பட்டது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை செல்ல ஒரு பயணிக்கு ஜி.எஸ்.டி. வரியுடன் 7,670 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
நாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசா உடன் டிக்கெட் முன்பதிவுச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 10 பேர் டிக்கெட் முன்பதிவுச் செய்து, இலங்கைக்கு கப்பல் பயணம் மேற்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.