பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இன்றும் (ஜன.16), நாளையும் (ஜன.17) நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று (ஜன.17) மாலை 04.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் (ஜன.18) அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
நாளை (ஜன.18) காலை 08.05 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அன்றைய தினம் இரவு 10.00 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.