Homeசெய்திகள்தமிழ்நாடுவிவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி

விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி

-

- Advertisement -
kadalkanni

விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கரையங்காடு பகுதியில் கரடி கடித்து இரண்டு விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொல்லிமலையில் கரடி: வனத்துறை விளக்கம்- Dinamani

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலா தளமாக கொல்லிமலை விழங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு அரப்பளீஸ்வரர் கோயில் எட்டு கைஅம்மன் கோயில்,மாசி பெரியண்ணன் கோயில் ,ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி , நம் அருவி மற்றும் தாவரவியல் பூங்கா ,படகு இல்லம் என பல சுற்றுலா தளங்கள் உள்ளது.

கொல்லிமலை பகுதியில் மான்கள், மயில்கள், கரடி ஒரு சில பகுதியில் ஓநாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செம்மேடு வியூ பாயிண்ட் அருகில் கரடி ஒன்று உணவு தேடிக் கொண்டிருந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் செம்மேடு ஊராட்சி வாழவந்தி நாடு அருகே உள்ள கரையங்காடு பகுதியில் காலை 6 மணிக்கு காளிகவுண்டர் (80) மற்றும் பழனிசாமி (50) ஆகிய இருவரும் காளியம்மன் கோயில் அருகே விவசாய வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த நிலையில், முகம், கையில் பலத்த காயங்களுடன் தற்போது அவர்கள் கொல்லிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் அருகே கரடி தாக்கிய விவசாயிக்கு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை | A farmer who was attacked by a bear near Namakkal is receiving continuous treatment in the hospital

செம்மேட்டில் இருந்து முக்கிய சுற்றுலா தளமான தாவரவியல் பூங்கா, படகு இல்லம் செல்லக்கூடிய வழியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ