Homeசெய்திகள்தமிழ்நாடு"நயினார் நாகேந்திரன் பணம் பறிமுதல் விவகாரம்"- அண்ணாமலை விளக்கம்!

“நயினார் நாகேந்திரன் பணம் பறிமுதல் விவகாரம்”- அண்ணாமலை விளக்கம்!

-

 

"நயினார் நாகேந்திரன் பணம் பறிமுதல் விவகாரம்"- அண்ணாமலை விளக்கம்!

பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் பணம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.

“மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?”- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!

அப்போது அண்ணாமலை தெரிவித்ததாவது, “நயினார் நாகேந்திரன் பணம் சர்ச்சை தொடர்பாக சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது. நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் விசாரணை நடத்தட்டும்; அதைப் பற்றி கவலையில்லை. எதிர்க்கட்சிகள் இதை வைத்து வேண்டுமென்றே அரசியல் செய்கின்றன” எனத் தெரிவித்தார்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு செல்வப்பெருந்தகை யுகாதி வாழ்த்து!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் துணி பேக்கில் கட்டுக்கட்டான பணத்துடன் பா.ஜ.க. நிர்வாகிகள் மூன்று பேர் நெல்லை புறப்பட்டு செல்ல முயன்ற போது, சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அதில், கட்டுக்கட்டாக ரூபாய் 4 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ