
சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கூந்தலில் எண்ணெய் பசை நீங்க இதை பண்ணுங்க!
கோவை கார் குண்டுவெடிப்புத் தொடர்பாக, சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (பிப்.10) காலை 09.00 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் 5 இடங்கள் உட்பட 8 மாவட்டங்களில் 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை திரு.வி.க. நகரில் உள்ள முகமது அப்துல்லா பாஷா என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் முகமது சுலைமான் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகரில் உள்ள ஹாஜிமார் தெரு பகுதியில் அலி ஜகாத் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உடல் எடை அதிகரிக்க நேந்திரம் காய் கஞ்சி!
இதனிடையே, சென்னையில் நுங்கம்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.