தொடர் கனமழை காரணமாக, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை!
தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடுகிறது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
உபரிநீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பிவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தொடர் கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (டிச.18) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.