spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லை மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிப்பு

-

- Advertisement -
kadalkanni

நெல்லை மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டு, மறைமுக தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

மேயர் வேட்பாளராக போட்டியிடும் கவுன்சிலர்கள் நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை வேட்புமனுவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மைய கூட்ட அரங்கில் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், அதனை திரும்ப பெறுவதற்கு காலை 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதில் போட்டி இருந்தால் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

ஆடியோ -வீடியோ! சந்தி சிரிக்கும் திமுக கமிஷன் விவகாரம்
நெல்லை மாநகராட்சி

இந்த நிலையில், திமுக சார்பில் மேயர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லைக்கு வருகை தந்தனர். தொடர்ந்து இன்று காலை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில், மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, போட்டியின்றி கட்சி தலைமை முடிவு செய்யும் மேயர் வேட்பாளருக்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து, அவரை மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து மாநகராட்சி மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை அறிவித்தார். அவருக்கு கவுன்சிலர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

kn nehru assembly

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் ஆவார. இவர் நெல்லை மாநகராட்சியில் 3-வது முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கிட்டு, தனது வார்டு பகுதி முழுவதும் எப்போதும் சைக்கிளில் தான் பயணம் செய்யக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. தலைமையால் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். அவருக்கு மற்ற கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

MUST READ