
தமிழகத்தின் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அருவிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், ஏரிகள், குளங்களில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது.
நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு!
அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளத்தில் காலை 06.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மாவட்ட ஆட்சியர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் ஆட்சியர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பதை உறுதிச் செய்ய வேண்டும். பால் பவுடர், தண்ணீர் கேன்கள், குடிநீர் பாட்டில்கள் பிஸ்கட்டுகளை போதிய அளவில் இருப்பில் வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர், முதலமைச்சர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்!
தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். கனமழை நாளை வரை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.