Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி -உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு

புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி -உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு

-

புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி

புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் வெளியாகியுள்ளது.

பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவனமாக உள்ளது. இதே போன்று தமிழ்நாடு அரசின் பல்வேறு சமூக நல திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் அட்டை முக்கியமாக உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக சுமார் 2 லட்சம் பேர் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதிதாக ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன் படி விண்ணப்பிக்கப்பட்ட 2 லட்சம் விண்ணப்பங்களை மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் அந்த மாவட்டத்திற்குரிய அதிகாரிகள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் அட்டையை வழங்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு தளர்த்தபட்ட நிலையில் இன்று முதல் புதிதாக ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கனவே சரிபார்த்து வைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணியானது தற்போது தொடங்கியுள்ளது. மீதம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியானது முடிவடைந்து தகுதியுள்ளவர்களுக்கு விரைவில் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ