Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய வக்ஃபு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது - அப்துல் கரீம்

புதிய வக்ஃபு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது – அப்துல் கரீம்

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சந்தித்து வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.புதிய வக்ஃபு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது - அப்துல் கரீம்சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  நேரில் சந்தித்து  நன்றி  தெரிவித்தோம்.

புதிய வக்ஃபு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது, இஸ்லாமியர்கள் பொது நலனுக்காக வழங்கிய சொத்துக்களை நிர்வகிக்க இஸ்லாமியர்களுக்கு தான் உரிமை உண்டு, இந்நிலையில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை ஏன் வக்ஃபு நிர்வாகத்தில் கொண்டுவர வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

வக்பபு சட்ட திருத்த மசோதா அரசியல் சட்டத்திற்கு எதிரானது,வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து வரும் 12ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை  போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு – எடப்பாடி வலியுறுத்தல்

MUST READ