Homeசெய்திகள்தமிழ்நாடு"புத்தாண்டு கொண்டாட்டம்"- கட்டுப்பாடுகள் என்னென்ன?

“புத்தாண்டு கொண்டாட்டம்”- கட்டுப்பாடுகள் என்னென்ன?

-

 

"புத்தாண்டு கொண்டாட்டம்"- கட்டுப்பாடுகள் என்னென்ன?

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

“விஜயகாந்திற்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!

சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகத்தில் வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் சுதாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, “மெரினாவில் இரவு 08.00 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 01.00 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது.

நிலுவை மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்குமா?- ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு!

சென்னை மாநகரம் முழுவதும் தானியங்கி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். மது அருந்தியவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது; வாடகை வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

MUST READ