Homeசெய்திகள்தமிழ்நாடு'அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!'

‘அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!’

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தளபதி 68 படத்தில் இணையும் லவ் டுடே பட நடிகை!

இது தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10.00 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைமாறிய அஜித் படம்…..அப்போ AK63 பட இயக்குனர் யார்?

இதனிடையே, பரவலாகப் பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், வீராணம், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று (நவ.28) காலை 10.00 மணிக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ