Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்ஐஏ நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக 4 பேர் கைது!

என்ஐஏ நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக 4 பேர் கைது!

-

 

என்ஐஏ நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக 4 பேர் கைது!

கோவை கார் குண்டுவெடிப்புத் தொடர்பாக, தமிழ்நாட்டில் என்ஐஏ நடத்திய சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்க்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆட்சேர்ப்பு வழக்கு ஆகியவைத் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் 21 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.

அத்துடன், சோதனையில் ஆறு மடிக்கணினிகள், 25 செல்போன்கள், 34 சிம் கார்டுகள், 3 ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. மெட்ராஸ் அரபிக் கல்லூரி, கோவை அரபிக் கல்லூரிக்கு தொடர்புடைய 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தங்களைப் பரப்புவது, இந்திய அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு விரோதமாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

U19 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 10 பேர் கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

MUST READ