விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நிஹாரிகா
சென்னை நீலாங்கரையில் நடந்த மாற்றுக் கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் பயம் இல்லாமல் இருக்கும் போது. நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். என்.ஐ.ஏ. சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்? சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. நியாயப்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னிடம் தான் விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.
தளபதி 69 தான் இறுதி திரைப்படம்… நடிகர் விஜய் முடிவு…
சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தது தான். வரும் பிப்ரவரி 05- ஆம் தேதி நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.