Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரி: மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

நீலகிரி: மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

-

- Advertisement -

நீலகிரி: மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

student

நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹாதி. இவரது மகன் அப்துல் ஆஷிக் (13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று அப்துல் ஆஷிக் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் குன்னூர் அருகே உள்ள பார்க் சைடு எஸ்டேட் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு எக்கோ ராக் என்ற மலைப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்துல் ஆஷிக் மலை உச்சியில் இருந்து தவறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

தகவல் அறிந்த அப்துல் ஆஷிக்கின் தந்தை அப்துல் ஹாதி மேல் குன்னூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மேல் குன்னூர் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா மற்றும் கொலக்கம்பை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் தீயணைப்புதுறை அலுவலர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆஷிக் தவறி விழுந்ததாக கூறப்படும் எக்கோ ராக் மலைப்பகுதியில் இருந்து அப்துல் ஆஷிக்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

death

பிரேத பரிசோதனை முடிந்து பின் மாணவனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

MUST READ