கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்ததை அடுத்து கேரளா- தமிழ்நாடு எல்லையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய கீழ நாடு காணி சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்த பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறையினர் பகுதியில் இருக்கக்கூடிய நாடு காணி ,பாட்ட வயல் சோலாடி, தாளூர், சோதனை சாவடிகளில் சுகாதார ஆய்வாளர் உட்பட மூன்று பெயர்கள் இந்த ஐந்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வெப்பத்தை தெர்மல் மீட்டர் கொண்டு கண்டறிந்து அதன் பின்னரே வாகனங்கள் தமிழக எல்லைப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.