Homeசெய்திகள்தமிழ்நாடுநிபா வைரஸ்: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை

நிபா வைரஸ்: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை

-

- Advertisement -

நிபா வைரஸ்: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணைகேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் கண்டறியப்பட்டு்ள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட 175 பேரில் 74 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

நிபா வைரஸ்: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை

கேரளாவில் கொரோனா காலத்தில் இருந்த அச்சம் தற்போது நிபா வைரஸ் தொற்றால் உருவாகி உள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் 24 வயது இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

நிஃபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை  உத்தரவிட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

MUST READ