Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்எல்சி விவகாரம்- சி.வி.சண்முகம் எம்பி நோட்டீஸ்

என்எல்சி விவகாரம்- சி.வி.சண்முகம் எம்பி நோட்டீஸ்

-

என்எல்சி விவகாரம்- சி.வி.சண்முகம் எம்பி நோட்டீஸ்

என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் அதிமுக எம்.பியும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம் நோட்டீஸ் அளித்துள்ளார்.

Image

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்தன. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

Farmers

இந்நிலையில் என்.எல்.சி. விரிவாக்க பணிகளுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் சி.வி.சண்முகம் நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் பொதுமக்களுக்கு எதிரான என்.எல்.சி. நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் என்.எல்.சி. நிர்வாகம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறது என சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

MUST READ