Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் விலை கடும் சரிவு!

தொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் விலை கடும் சரிவு!

-

- Advertisement -

 

ஆயுதபூஜையையொட்டி, பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு!
File Photo

தொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் ஆண்டிப்பட்டி மலர்ச்சந்தையில் பெரும்பாலான பூக்களின் விலை சரிந்துள்ளது.

தருமபுரியில் இ.பி.எஸ். பேனர் கிழிப்பு!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணியபிள்ளைப்பட்டி, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை, முல்லை, ரோஜா உள்ளிட்ட ஏராளமான பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள், தெப்பம்பட்டி சாலையில் உள்ள மலர்ச்சந்தையில் ஏலம் விடப்படுகிறது.

தற்போது தொடர்ச்சியாக, முகூர்த்த நாட்கள் இல்லாத காரணத்தால், மலர்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ செண்டுமல்லி 100 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை கிலோ 10 ரூபாய்க்கும், செவ்வந்தி, பன்னீர் ரோஜா கிலோ 20 ரூபாய்க்கும், அரளி மற்றும் சம்பங்கி பூக்கள் ஆகியவை கிலோ 100 ரூபாய்க்கும் விலை போனது.

திமுக அரசு சென்னையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்கிறது – உதயநிதி ஸ்டாலின்

போதிய விலைக் கிடைக்காததால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். அத்துடன், சாகுபடி செய்வதற்கு கூட பூக்களின் விலை கட்டுப்படி ஆகாததால், பூக்களை கீழே கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

MUST READ